Monday, 31 July 2017

இந்து பாதுகாவலர்கள் இதற்கு முன் இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்களையும் தலித்களையும் தாக்குகிறார்கள்.



ஆயுதப் படையின் உயர் பொறுப்புகளிலிருந்த முன்னாள் அதிகாரிகள் 114 பேர் சேர்ந்து பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,

இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக எங்கள் வாழ்கையை நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். நாங்கள் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை. இந்தக் கடிதத்தை எழுத வேண்டிய நிலை வந்ததை எண்ணி நாங்கள் வருந்துகிறோம். நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளே எங்களை இந்த கடிதத்தை எழுத வைத்திருக்கிறது. Not in my Name என்கிற அமைப்போடு எங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.

இந்த அமைப்பு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேரைக் கொண்டிருக்கிறது. ஆயுதப் படையில் இருந்து நாங்கள் போராடும் போது பல பேர் பல பின்னணியில் இருந்தாலும் நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் போராடியிருக்கிறோம்.

ஆனால் தற்போது இந்தியாவில் நடப்பது என்ன? இந்து பாதுகாவலர்கள் இதற்கு முன் இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்களையும் தலித்களையும் தாக்குகிறார்கள். கருத்துச் சுதந்திரம் இல்லாதவாறு ஊடகங்கள், அறிஞர்கள் மீது தேசவிரோதக் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு மேலும் இதை நாங்கள் கண்டுகொள்ளாவிட்டால் நாங்கள் எங்கள் கடமையை மீறியவர்களாக ஆகிவிடுவோம்.


மாற்றுக் கருத்தில் இருப்பது துரோகமல்ல. அதுதான் ஜனநாயகம். ஆகையால் மதத்யி அரசும், மாநில அரசும் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, அரசியல் சட்டம் எழுத்திலும் நோக்கத்திலும் உள்ளபடியே நிலைக்க விரைந்து நடவடிக்கை எடுங்கள்.

இப்படிக்கு,
ஆயுதப் படையின் முன்னாள் அதிகாரிகள்
114 பேர்.

http://indianexpress.com/article/india/armed-forces-veterans-write-open-letter-to-pm-narendra-modi-condemn-targeting-of-muslims-dalits-4774201/

இந்து பாதுகாவலர்கள் இதற்கு முன் இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்களையும் தலித்களையும் தாக்குகிறார்கள்.



ஆயுதப் படையின் உயர் பொறுப்புகளிலிருந்த முன்னாள் அதிகாரிகள் 114 பேர் சேர்ந்து பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது,

இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக எங்கள் வாழ்கையை நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். நாங்கள் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை. இந்தக் கடிதத்தை எழுத வேண்டிய நிலை வந்ததை எண்ணி நாங்கள் வருந்துகிறோம். நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளே எங்களை இந்த கடிதத்தை எழுத வைத்திருக்கிறது. Not in my Name என்கிற அமைப்போடு எங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.

இந்த அமைப்பு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேரைக் கொண்டிருக்கிறது. ஆயுதப் படையில் இருந்து நாங்கள் போராடும் போது பல பேர் பல பின்னணியில் இருந்தாலும் நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் போராடியிருக்கிறோம்.

ஆனால் தற்போது இந்தியாவில் நடப்பது என்ன? இந்து பாதுகாவலர்கள் இதற்கு முன் இல்லாத அளவிற்கு இஸ்லாமியர்களையும் தலித்களையும் தாக்குகிறார்கள். கருத்துச் சுதந்திரம் இல்லாதவாறு ஊடகங்கள், அறிஞர்கள் மீது தேசவிரோதக் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு மேலும் இதை நாங்கள் கண்டுகொள்ளாவிட்டால் நாங்கள் எங்கள் கடமையை மீறியவர்களாக ஆகிவிடுவோம்.


மாற்றுக் கருத்தில் இருப்பது துரோகமல்ல. அதுதான் ஜனநாயகம். ஆகையால் மதத்யி அரசும், மாநில அரசும் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, அரசியல் சட்டம் எழுத்திலும் நோக்கத்திலும் உள்ளபடியே நிலைக்க விரைந்து நடவடிக்கை எடுங்கள்.

இப்படிக்கு,
ஆயுதப் படையின் முன்னாள் அதிகாரிகள்
114 பேர்.

http://indianexpress.com/article/india/armed-forces-veterans-write-open-letter-to-pm-narendra-modi-condemn-targeting-of-muslims-dalits-4774201/

Friday, 28 July 2017

கர்நாடகா தேர்தலுக்கு பா.ஜ.க இப்போதே தயார்! 5000 வாட்ஸ் அப் குழுமங்களா...?



கர்நாடகாவில் தேர்தல் வருவதையொட்டி பா.ஜ.க 5000 வாட்சப் குழுமங்களை உருவாக்கியுள்ளது. மே 2018 நடக்கவிருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக பிற கட்சிகள் எந்த பிரச்சாரங்களையும் துவங்காமல் மந்தமாக இருந்து வருகின்றனர். ஆனால் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் போரில் களமாட இப்போதே முன்னேற்பாடுகளை மும்முரமாக செயலாற்றிக்கொண்டி
ருக்கிறது. ஏற்கெனவே ஊடகப் புகழ் கட்சியாகவும், தொழில்நுட்ப விரும்பிகளாகவும் தன் கட்சியை வானளாவப் பரவ விடுவதற்கான வேலைகளை செய்வதில் பெயர் போன பா.ஜ.க இந்த முறை ஒரு நாளுக்கு இரண்டு மணிநேரம் வாட்சப்பிலேயே செலவு செய்கின்றது.

Factory Daily யின் கணிப்பின்படி இந்த முறை கர்நாடகாவின் தேர்தல் பா.ஜ.கவுக்கு கடினமான பலப்பரிட்சையாக இருப்பதால் தன் கட்சி செய்திகளை பரவச் செய்வதற்காக 5000வாட்சப் குழுமங்களை உருவாக்கியுள்ளது. கர்நாடக பாஜக தொழில் நுட்பப் பிரிவின் ஆய்வாளர் கே அம்ரீஷ் கூறுகிறார்:
“முதலில் வெறும் சமூகதளங்களாக வலைப்பூவும் வலைதளமும் மட்டுமே செயல்பட்டிருந்தது. ஆனால் இப்போது தேர்தல் அறிக்கை முதல் தேர்தல் முடிவு வரை காய்களை நகர்த்தி அடுத்தடுத்தக் கட்டத்திற்கு பணிகளைக் கொண்டு செல்ல அனைத்துத் தரப்பு வல்லுநர்களும் எங்களிடம் இருக்கிறார்கள். இந்த வாட்சப் குழுக்கள் வயது, வேலை, பாலினம், மூத்தக்குடிமகன், புறநகர் கிராமம் என்று பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் குழுக்கள் பிரிக்கப்பட்டு பா.ஜ.க தொண்டர்களை அட்மின்களாக வைத்து செயல்படுகின்றன.

பா.ஜ.க  பற்றி செய்திகளையும் சாதனைகளையும் நாங்கள் மெழுகேற்றி, வடிவமைத்துத் தயார் செய்தபின் அவற்றை இந்த குழுக்களில் பரப்பப்படும்” என்றார் கே.அம்ரீஷ்.

கர்நாடக பா.ஷ.க வின் வாட்சப் குழுமம்
5,000 வாட்சப் குழுமம்
100 பயிற்ச்சியளிக்கப்பட்ட தொண்டர்கள்
25,000 தொழில் நுட்ப உறுப்பினர்கள்
85,000 குழுமத்தில் இணைந்துள்ள உறுப்பினர்கள்

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 100 தொண்டர்களைப் பொறுக்கியெடுத்து இந்தக் குழுமங்களை நடத்துவதே பா.ஜ.கவின் திட்டம் “அவர்கள் சட்டங்களில் கலந்து கொள்ளவோ, போரட்டங்களை முன்னெடுக்கவோ மற்ற கட்சித் தொடர்பான எந்த காரியங்களிலும் ஈடுபடத் தேவையில்லை. ஒரு நாளைக்கு குறைந்த  பட்சம்  அரை மணிநேரம் செல்போனுடன் கழிக்க வேண்டும் என்பது மட்டும்  அவர்களிடம் நமது எதிரிபார்ப்புÓ என்று அம்ரீஷ் நோக்கத்தை  விவரிக்கிறார். கர்நாடகா முழுவதும் கிட்டத்திட்ட 25,000 பிஜேபி தொண்டர்கள் இக்குழுவில் பங்கு கொள்வார். 

இந்த வாட்சப் முறையைத் தான் மற்ற சமூக ஊடகங்களோடு பிப்ரவரியில் கோவா மற்றும் உ.பி.யில் நடைபெற்றத் தேர்தலில் பா.ஷ.க கையாண்டது.

A Smart Phone War in up:
“உ.பியில் ஒரு ஸ்மார்ட் போன் போர் என சில ஊடகங்கள் வர்ணித்த பா.ஜ.கவின் நாடாளுமன்ற தேர்தல் தந்திரங்கள் தான் 403 இடங்களில் 312 இடங்களை பிடிக்க உதவின.

பார்க்க:internet ninjas in the mother  of elevtorl battels on uttar Pradesh  சமூக ஊடகங்கள் தங்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆதரவுகளைத் திரட்டிட  முக்கிய காரணியாக பா.ஜ.க கருதுகிறது என்று அரசியல் கருத்தாளர் சந்தீப் சாஸ்திரி கூறியுள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இப்போது பெரும் ஏமாற்றம் அடையவில்லை அதே நேரத்தில் கடந்த பாஜக ஆட்சி மிகுந்த முரண்பாடுகளிலும் பரந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் மூழ்கிறது. இம்முறையில் கர்நாடகவில் போட்டி கடுமையாக இருக்கும். காரணம் மக்கள் 2008ல் நடந்த பாஜக ஆட்சியையும் அதன் ஊழல்  அரசையும் இன்னும் மறக்கவில்லை. அதே நேரத்தில் இம்முறை காங்கிரஸ் ஆட்சியில்  மாநிலத்தின் எந்த மோசடிகளிலும் காங்கிரஸ் கட்சி சிக்க வில்லை என்கிறார் ஜெயின்  பல்கழைக்கழகத் துணைவேந்தர் சாஸ்திரி மொபைல் போன் எவ்வாறு பயன்படுத்துவது செய்திகளையும் அனிமேஷன்களையும் எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பான பயிற்சிகளை பாஜக அதன் தன்னார்வத் தொண்டர்களுக்கு அளித்து வருகிறது இதனால் அவர்களுக்குக் 2016 நவம்பரில் 160 மில்லியன் வாட்சப் பயன்பாட்டாளர்களைத் தக்க வைத்திருந்த வாட்சப்  தற்போது பிப்ரவரியில் 200 மில்லியன் பயன்பாட்டாளர்களை கொண்டு உலகில் தனது மிகப்பெரிய உள்ள நாடாக இந்தியாவைப் பார்க்கிறது. 2014 இன்ஸ்டன்ட் மெஸஞ்சர் மென்பொருள் வெறும் 50 மில்லியன் நடப்புப் பயனாளர்களை மட்டுமே இந்தியாவில் பெற்றிருந்தது.

பா.ஜ.க தற்போது ஒரு தலைமை இடத்தை பெற்றுள்ளது. காரணம் ஊடகங்களின் சக்தியையும் அதன் வீரியத்தையும் உணர்ந்து தன்னை அதன் மூலம் வளர்த்து வருகிறது. மேலும் 2014 தேர்தலில் ஒரு புதிய முன்மாதிரியை ஊடகத்தின் மூலம் ஏற்படுத்தி ஊடக சக்தியை நாட்டிற்கு உணர்த்தியுள்ளது என்று ஷாஸ்திரி கூறியதோடு 2018ல் தேர்தல் போட்டி என்பது பாஜகவின் மத்தியக் குழுவால் நிர்வகிக்கப்படும் என்றார். தற்போது கர்நாடகாவில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி 225 சட்டமன்ற தொகுதியில் 123 இடங்களை பெற்றுள்ளது. பாஜக 44 இடங்களையும் ஜனதா தன் 48 இடங்களையும் மீதத்தை மற்றக் கட்சிகளும் பெற்றுள்ளன.

காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடக பொறுப்பாளராக நடிகர் அரசியல்வாதியான திவ்யா ஸ்பானதனாவை நியமித்துள்ளது. எந்தப் பேட்டி அழைப்பையும் இதுவரை ஸ்பான்தனா ஏற்கவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. ஓநாய்கள் சப்தமிட்டு ஊளையிடும் முன் நரி வாய் திறந்தால் கா(நா)டு நலம் பெறும் கிடைக்கும் வழிகாட்டுதல்களையும், குறுஞ்செய்திகளையும் வைத்துப் பிரச்சாரத்திற்கான விஷயங்களைத் தானாக உருவாக்கிக்கொள்ளமுடியும் தன்னார்வத் தொண்டர்கள் பெங்களூர் வந்து கிடைக்கும் வழிகாட்டுதல்களையும் குறுஞ்செய்திகளையும் வைத்து பிரச்சாரத்திற்கான விஷயங்களை தானாக உருவாக்கிக்கொள்ள முடியும். பெங்களூர் வந்து தன்னார்வத் தொண்டர்களை இப்பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் தங்களது தொகுதிக்குச் சென்று பிறகும் பயிற்சியளிப்பார். பாஜக இத்தன்னார்வத் தொண்டர்களை, தான் சேகரித்த கட்சி  உறுப்பினர் விவரங்களிலிருந்து  தேர்வு செய்து கொள்கிறது. சமீபத்தில் 2016ம் ஆண்டு பா.ஜ.க தன் கட்சி உறுப்பினர்களை அதிகரிக்க மக்களிடம் அவர்களது வயது முகவரி பாலினம், ஆகிய தகவல்களைச் சேகரித்துள்ளது. கர்நாடகாவில் கிட்டத்தட்ட 84 லட்சம் பேர் தங்களை பா.ஜ.க உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளார்கள். அதில் 25,000 தன்னார்வத் தொண்டர்களை தேர்வு செய்து தொழில் நூட்பப் பிரிவில் சேர்த்துள்ளனர். அவர்கள் வார இறுதிநாட்கள் (அ) ஓய்வு நேரங்கள் (அ) எப்போதெல்லாம் இதற்கு நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் வாட்சப் குழுமத்திற்காக நேரம் கொடுப்பார்கள் என்கிறார் அம்ரீஷ் வாட்சப் அடிப்படையில் பா.ஜ.கவின் செய்தியான நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு என்பதை மக்களிடம் சென்று சேர்த்த அந்த உக்தி திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

“நீங்கள் ஆய்வறிக்கைகளைப் பார்த்தால் முகநூலும் டிவிட்டரும் மிகவும் குறைந்த உபயோகமுள்ள மென்பொருளாக மாறியுள்ளன. இன்றைய தேதியில் அவைகள் குப்பைத்தொட்டிகளாக மாறியுள்ளன. மக்களையெல்லாம் பொது மனிதனின் இணையமான வாட்சப்  பின் பக்கம் நகர்ந்து செல்கின்றனர் என்று கருத்துரைத்தார் அம்ரீஷ் 

பெண் போராளிகள்மீது தொடரும் வக்கிரத் தாக்குதல்



சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை எதிர்த்து கேட்கும் நபர்களை குறிவைத்து சமூக வலைதளங்கள் மூலமாகவோ அலைபேசியிலோ தனி நபர் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி இந்த தாக்குதலுக்கு உள்ளானார். ஆனால் அதை ஜோதிமணி துணிச்சலாக எதிர்க்கொண்டு அவர் எப்படியெல்லாம் ஆபாசமாக திட்டப்பட்டார்; மிரட்டப்பட்டார் என்பதை பொது வெளியிலேயே படம் போட்டு காண்பித்துவிட்டு பின்பு காவல்துறையிடம் புகாரும் கொடுத்தார்.

அந்த சமயத்தில் ஜோதிமணி குறிப்பிட்டதாவது, இது தனி நபர்கள் தனியாக ஒருவரை மிரட்டுவது கிடையாது. மாறாக இவர்கள் திட்டமிட்டு குழுவாக செயல்படுகிறார்கள். இது ஆளும் அரசின் உதவியோடு செயல்படுகின்றது என்று பா.ஜ.க வை நேரடியாக குற்றம்சாட்டினார்.

அவரை தொடர்ந்து தற்போது “கக்கூஸ்” ஆவணப்பட இயக்குனர் திவ்யா பாரதி அவர்கள் இந்த வக்கிர தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். கடந்த இரண்டு தினங்களாக மிரட்டல்கள் வருவதாகவும் ஆபாசமாக பேசுவதாகவும் வாட்ஸ்அப் மூலம் அசிங்கமாக தொடர்பு கொள்வதாகவும் தனது முகநூலில் தெரிவித்திருக்கிறார்.


மக்களுக்காக போராடும் போராளிகள் மீது விமர்சனங்கள் இருந்தால் அதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர இப்படி வக்கிரத்தை வெளிப்படுத்துவது மிகவும் மோசமான நடைமுறை என்று ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். குறிப்பாக பெண் போராளிகள் மீதே இது போன்ற தாக்குதல்கள் நடப்பதாகவும் இந்த தாக்குதல்களை நடத்துவது ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த மதவெறியர்களே என்று இணையதள பிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.